முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக விவசாயிகளின் பாதுகாவலர் முதல்வர்: அமைச்சர்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.1 - தமிழக விவசாயிகளின் பாதுகாவலர் ஜெயலலிதா என்று மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை விழாவில் தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். ஜெயலலிதாவின் நல்லாசியுடன் இந்த இனிய விழாவில் நான் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் தொழில் துறையின்கீழ் செயல்பட்டுவரும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் கரும்பு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் முதலில் பதிவாகும் 8,000 ஏக்கர் நிலத்தில் விதைக்கரும்பு இலவசமாக வழங்குதல், 60 வயதிற்குட்பட்ட சர்க்கரை

ஆலை தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு மற்றும் புலிப்பரகோவில் கிராமத்தில் அரசாங்க நேரடி கொள்முதல் நிலையம் துவங்க ஆணை வெளியிட்டு ஆலையின் நலனிலும் கரும்பு விவசாயிகள் நலனிலும் அக்கரை கொண்டுள்ள

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

தொன்மை வாய்ந்த இவ்வாலை முதன் முதலில் 1961ஆம் ஆண்டு நாளொன்றுக்கு கரும்பு பிழித்திறன் 800 டன்கள் என்ற அளவில் தொடங்கி படிப்படியாக அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 2500 டன்கள் என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சிக்கு விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. மேலும், விவசாயம் சார்ந்த தொழில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சர்க்கரை ஆலைகள் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் சுமார் 3.50 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு இதன் மூலம் சுமார் 385 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி

செய்யப்படுகிறது.  இந்திய நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 7 சதவீதமாகும். தமிழ்நாட்டில் தற்போது கூட்டுறவு துறையில் 16 சர்க்கரை ஆலைகளும், பொதுத் துறையில் 2 சர்க்கரை ஆலைகளும், தனியார் துறையில் 26 சர்க்கரை

ஆலைகளும் ஆக மொத்தம் 44 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.

முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட உள்ள புதிய தொழில் கொள்கை​2011 மற்றும் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட விஷன்​2025 ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்துறையை முதன்மை மாநிலமாக கொண்டுவர முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆக்கnullர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் nullடித்த வளர்ச்சியினை கருத்தில்

கொண்டு தமிழக அரசால் தற்போது ஆலைகளில் இணை மின் உற்பத்தி மற்றும் எத்தனால் வடிப்பகங்களுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வளாகங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1241 கோடி செலவில் 183 மெகாவாட் உற்பத்தி திறனுடன் இணைமின் உற்பத்தி திட்டம் நிறுவப்பட்டு வருகிறது.

மேலும் எரிபொருள் பற்றாக்குறையை ஈடுகட்டும் பொருட்டு அமராவதி மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் எத்தனால் வடிப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இவ்வாலை தற்போது புணரமைக்கப்பட்டு 2011​2012 ஆம் ஆண்டில் சுமார் 1 இலட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு nullர்வாங்க சுத்திகரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் மேற்கொள்ள மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.6.28 கோடி வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இவ்வாலையில் பணிபுரிந்து தன்விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் பணி  ஒய்வில் சென்ற ஊழியர்களின் கோரிக்கையினை முதல்வர் ஜெயலலிதா கனிவுடன் பரிசீலித்து 60 வயதிற்குட்பட்டவர்களை மீண்டும் தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்த்து கொள்ள ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், கரும்பு உற்பத்தியாளர்கள், ஆலை நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் ஆலை சிறப்பாக செயல்பட தனது மனப்nullர்வமான ஒத்துழைப்பினை வழங்கி உறுதுணையாய் இருக்க வேண்டுமென இந்த வேளையில் கேட்டுக்

கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் அதிநவீன தொழிற்நுட்பங்களின் உதவி மற்றும் புதிய பண்ணைக் கருவிகளை கொண்டும் முன்னேறிய கரும்பு சாகுபடி முறைகளை பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடமிருந்தும் கேட்டறிந்து அவற்றை கரும்பு விவசாயிகளுக்கு நேர்முக விளக்கம் அளித்து கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலமும், செலவுகளை குறைப்பதன் வாயிலாகவும் கரும்பு விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்பதை கருத்தில் கொண்டு nullடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த ஆண்டில் சுமார் 7500 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்த ரூ.12.93 இலட்சம் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொட்டு nullர் பாசனம் நிறுவிட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதுடன் கரும்பு உற்பத்திக்கு தேவைப்படும் சொட்டு nullர் வழி உரம் மற்றும் கரும்பு வளர்ச்சி

ஊக்கிகள் வழங்கிட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மானியமாக ரூ.10,000/ ​வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், இந்த ஆலை தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு காரணமாக இருக்கின்ற அனைவருக்கும் குறிப்பாக கரும்பு உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது

நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டு இவ்வாலை தொடந்து சீறிய முறையில் செயல்பட்டு பொன்விழா மற்றும் நூற்றாண்டு விழா கொண்டாட எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களாகிய எங்களை இவ்விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்