முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பலசோர், டிச.2 - அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணை ஒரிசாவின் உள்ள வீலர் தீவில் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒரிசா மாநிலம் சாண்டிப்பூர் பாதுகாப்பு தள பகுதியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து அக்னி 1 ஏவுகணை நேற்று காலை 9.25 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய திறன் பெற்றது. 15 மீட்டர் நீளமும், 12 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை ஆயிரம் கிலோ எடை கொண்ட ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கை மிக துல்லியமாக தாக்கும் வல்லமை உடையது. இது ஏற்கனவே இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்