முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டங்களை உடனடியாக அமுல்படுத்த அமைச்சர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.2 -   1.12.2011 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அ. முஹம்மத்ஜான் கலந்து கொண்டு துறையின் திட்டங்களை ஆய்வு செய்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு செயலர் கோ. சந்தானம், பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறையின் இயக்குநர் முனைவர்.மு. ராஜேந்திரன், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் எஸ். தங்கசுவாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக முதலமைச்சர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்துள்ளதால் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களும் உடனடியாக மாவட்டங்களில் ஜனவரி மாதத்திற்குள் மிதிவண்டிகளை மாணவ, மாணவியருக்கு வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக கல்வித் உதவித்தொகையினை டிச.31-குள் வழங்கிட அறிவுறுத்தினார். விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டும் திட்டத்தின் கீழ் உடனடியாக தகுதியான நிலத்தினை தேர்வு செய்து பொதுப் பணித்துறையிடம் ஒப்படைத்து திட்டத்தினை விரைவுபடுத்திட அமைச்சர் அறிவுறுத்தினார்.

டாப்செட்கோ மற்றும் டாம்கோ மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இன மக்களுக்கு உரிய கடன்தொகையினை வழங்கி அம்மக்களுக்கு உதவி புரியுமாறு அலுவலர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.  மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவிச்சங்கத்தின் பணிகளை செம்மையாக்கி அச்சங்கங்கள் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிடவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்