முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்து அபகரிப்பு புகார்: சினிமா வினியோகஸ்தர் கைது

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

மதுரை,டிச.2 - சினிமா வினியோகஸ்தர் அன்பு செழியன் ரூ. ஒன்றரை கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிச்சான் குளத்தை சேர்ந்தவர் தங்கராஜ். திரைப்பட தயாரிப்பாளர். இவர் சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிடம் கொடுத்த புகாரில் திரைப்பட வினியோகஸ்தர் அன்புசெழியனிடம் ரூ.20 லட்சம் கடனாக வாங்கினேன். அப்போது அவர் 3 லட்சத்தை வட்டியாக எடுத்துக்கொண்டு 17 லட்சம் கொடுத்தார். இதற்காக எனது பெயரிலும், எனது மனைவி பெயரிலும் இருந்த ரூ. 1கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் காசோலைகளை கொடுத்தேன். தொடர்ந்து வட்டிபணத்தை செலுத்தி வந்தேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்திருந்த சொத்து ஆவணங்களுக்கு பவர்  எழுதி தரும்படி மிரட்டினார். அப்போது வாங்கிய பணத்தை செலுத்தி விட்டேன் என்றார். ஆனால் அவர் வட்டி மட்டும்தான் தரப்பட்டுள்ளது என்றார்.

   இந்த நிலையில் மதுரை துரைசாமி நகரை சேர்ந்த முரளி என்பவருக்கு பவர் எழுதி மதுரை பீபி குளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு எனது சொத்தை விற்றுவிட்டனர். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது மீட்டு தாருங்கள் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து சொத்து அபகரிப்பு, கந்து வட்டி கேட்டு மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சினிமாவினியோகஸ்தர் அன்பு செழியன்,அவரது நண்பர்கள் முரளி, ராமகிருஷ்ணன் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony