முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீடு - இந்தியா முழுவதும் கடைகள் அடைப்பு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை,டிச.2 - சில்லரை வியாபாரத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.  சில்லரை வியாபாரத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பல கோடி சிறு வியாபாரிகள் பாதிக்கப்படும் ஆபத்து எற்பட்டுள்ளது. சில்லரை வியாபாரம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது போல நாடெங்கும் அன்னிய முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்களுக்கே மத்திய அரசின் இந்த முடிவு பிடிக்கவில்லை.  என்றாலும் பணவீக்கத்தை சீர்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்த இதைவிட்டால் தனக்கு வேறுவழி தெரியவில்லை என்று கூறிய பிரதமர் மன்மோகன்சிங் அன்னிய முதலீடு அனுமதியை வாபஸ் பெற இயலாது என்று அறிவித்தார். 

இது சிறுவியாபாரிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசே அழித்து விடும் போல் இருக்கிறேதே என்று அவர்கள் கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள். 

மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க நாடெங்கும் உள்ள வியாபார அமைப்புகள் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இந்தியா முழுவதும் நேற்று சிறுவியாபாரிகள் தங்கள் கடைகளை மூடினார்கள். 

நாடெங்கும் சுமார் 5 கோடி வியாபாரிகள் இந்த கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாநிலங்களில் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை மூடி தர்ணா செய்தனர். மத்திய அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினார்கள். 

டெல்லி ஜந்தர் மந்தரில் பகல் 11.30 மணிக்கு பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் திரண்டு தர்ணா செய்தனர். கடையடைப்புப் போராட்டம் எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக நடந்ததாக அகில இந்திய வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பிரவீண் கண்டெல்வல் கூறினார். 

டெல்லியில் 90 சதவீத மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருந்தன. டெல்லியில் வியாபாரிகளுடன் பா.ஜ.க. தொண்டர்களும் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 20 இடங்களில் பிரதமர் மன்மோகன்சிங், டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் ஆகியோரது உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.  டெல்லியில் சதார்பஜார், கம்லா பஜார், சவ்ரி பஜார், கிருஷ்ணா நகர் மார்க்கெட்டுகள் நேற்று வெறிச்சோடின. 

தமிழ்நாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் நேற்று தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். சென்னையில் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. கோயம்பேடு மார்க்கெட் செயல்படாததால் வெறிச்சோடியது.  சென்னையில் உள்ள சிறு,சிறு காய்கறி மார்க்கெட்டுக்களும் மூடப்பட்டிருந்தன. இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தந. சென்னையில் மட்டும் 3 லட்சம் வியாபாரிகள் கடையடைப்பில் ஈடுபட்டனர். சென்னையில் நேற்று பெரிய ஓட்டல்கள் மட்டுமே திறந்திருந்தன. ஆனால் சென்னை புறநகர் பகுதிகளில் ஓட்டல்களும் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவை கடைகளுக்கு மட்டும் கடையடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 

வியாபாரிகள் கடையடைப்பு மற்றும்  உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னிட்டு சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago