முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மேலும் ஒரு ஊழல் மந்திரி டிஸ்மிஸ்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

லக்னோ, டிச.2 - உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு ஊழல் மந்திரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் மாயாவதி தலைமையில் பகுஜன்சமாஜ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் ஊழல் விவகாரத்தில் சிக்கிய 4 மந்திரிகள் ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 5-வதாக மேலும் ஒரு ஊழல் மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அம்பேத்கார் கிராம அபிவிருத்தித்துறை மந்திரி ரத்தன்லால் அகீர்வார் மீது இந்த நடவடிக்கையை முதல்வர் மாயாவதி எடுத்துள்ளார். நில அபகரிப்பு, எம்.எல்.ஏ. நிதியை தவறாக பயன்படுத்தியது, முந்தல்காண்ட் பிராந்திய அபிவிருத்தி நிதியை தவறாக பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக இவரை லோக் அயுக்தா நீதிமன்றம் தண்டித்துள்ளது. இதையடுத்து இவரை நேரில் அழைத்த மாயாவதி மந்திரி பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மாயாவதியிடம் கொடுத்தார். அகீர்வாரிடம் இருந்த அம்பேத்கார் கிராம அபிவிருத்தி இலாகா, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்வாமிபிரசாத் மூரியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏ. நிதியில் ரூ. 27 லட்சத்தை அகீர்வார் மோசடி செய்துள்ளார். அரசு நிலத்தை அவர் அபகரித்துள்ளார். மேலும் முந்தல்காண்ட் மேம்பாட்டு நிதியில் ரூ. 1.50 லட்சத்தை மோசடி செய்துள்ளார். எனவே இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், மோசடி செய்த நிதி முழுவதையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் லோக் அயுக்தா நீதிபதி மெஹ்ரோத்ரா உ.பி. அரசுக்கு சிபாரிசு செய்திருந்தார். அந்த சிபாரிசின் அடிப்படையிலேயே அகிர்வாரை மந்திரி பதவியில் இருந்து மாயாவதி நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்