முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27 போயிங் விமானங்களை வாங்குகிறது ஏர்-இந்தியா

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, டிச.2 - அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா, 27 போயிங் விமானங்களை வாங்குகிறது. நிதிநெருக்கடி, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணமில்லாத நிலை என்று கூறி வரும் ஏர் இந்தியா, ரூ. 43,777 கோடி கடனில் தவிக்கிறது. இந்த கடன் சுமையை குறைக்க மத்திய அரசின் நிதி உதவியை எதிர்பார்த்து நிற்கிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா இயக்குனர் குழு சமீபத்தில் கூடி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனத்தை மீட்கும் முயற்சியாக, இப்போது பெருமளவு பயன்படாத விமானங்களை விற்க அல்லது வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது ஏர் இந்தியா. ஏற்கனவே வாடகைக்கு எடுத்துள்ள விமானங்களுக்கான கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ரூ. ஆயிரத்து 500 கோடி வரை நிறுவனத்துக்கு மிச்சமாகும் என்று தெரிகிறது. மேலும் போக்குவரத்தை வலுப்படுத்த, முக்கிய வழித்தடங்கள், புதிய விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2006 ம் ஆண்டு வாங்குவதாக ஒப்பந்தம் போட்ட 27 போயிங் 787 விமானங்களை இப்போது வாங்கி விடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்