முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,நவ.2 -  சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் எல்லையில் குறிப்பாக விருகம்பாக்கம், அசோக்நகர், வேளச்சேரி, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய காவல் நிலைய சரகங்களில் உட்பட்ட பகுதகளில் வயதான வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் கேஸ் அடுப்பு மற்றும் தண்ணீர் குழாய்கள் பழுது பார்ப்பதுபோல் கூறி வீட்டினுள் சென்று வீட்டிலுள்ள வயதான பெண்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களை கை கால்களை கட்டிபோட்டும், வாயில் துணி கட்டியும் நகை பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் இருவரையும் நேற்று காலை 06.00 மணியளவில் மடிப்பாக்கம் காவல் நிலைய சரகம் ராம்நகர் செக்போஸ்ட் அருகில் ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும் தனிப்படை போலீசார் வாகன தணிக்கை செய்துக்கொண்டிருந்தபோது வேளச்சேரி வழியாக இருசக்கர வாகனத்தல் வந்த இரண்டு நபர்கள் நிறுத்தாமல் சென்றனர். இதனால் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.  அவர்களை விசாரித்தபோது பெரவலுர் பு.மு.ஆ. காலனியை சேர்ந்த விநாயகம் மற்றும் மாரிமுத்து என்றும் தெரிய வந்தது. இருவரும் பெரம்பூர் ரெயில்வே லோக்கோ பணிமனையில் கலாசி ஊழியர்கள் என்றும் தெரிய வந்தது. இவர்கள் இருவரில் விநாயகம் சமீப காலமாக பணிக்கு செல்லாமலும் மருத்துவ விடுப்பிலும், மற்றொரு ஊழியர் மாரிமுத்து பணியில் ஆஜராக விட்டு வெளியில் வந்து திருட்டு மற்றும் வழிபறி கொள்ளையடிப்பது தெரியவந்தது. 

மேற்படி இரு குற்றவாளிகளை விசாரணை செய்ததில் இந்த வருடம் ஜூன்மாதம் 2011-​ல் சாலிகிராம் விவேகானந்தர் நகர் சினிமா இயக்குநர்  வெங்கடேசன்  வீட்டிற்கு கேஸ் பழுது பார்ப்பது போல் வீட்டிற்குள் சென்று தனியாக இருந்த வேலைக்கார பெண்ணை கட்டிபோட்டு விட்டு அந்த பெண்ணின் கம்மல் மற்றும் மோதிரம் சுமார் 2 சவரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதன்பின் தொடர்ச்சியாக ஜூன் மாத கடைசியில் வேளச்சேரி ராம்நகர் 3வது தெருவில் ரிருந்தாவன் நகர் வீட்டில் இதே இரண்டு குற்றவாளிகளும் கேஸ் ரிப்பேர் செய்வதுபோல்  வீட்டினுள் புகுந்து வீட்டில் இருந்த பெண்ணின் வாயில் துணியை வைத்து கை கால்களை கட்டிபோட்டுவிட்டு அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச்செயன் வளையல் மொத்தம் சுமார் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் இதே குற்றவாளிகள் இருவரும் ஜூலை முதல் வாரத்தல் மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் மெயின்ரோட்டில் ஒரு வீட்டில் கேஸ் பழுது பார்ப்பதுபோல் சொல்ல வீட்டிற்குள் சென்று அந்த பெண்ணை கட்டிப்போட்டு உருட்டு கட்டையால் அடித்துவிட்டு அந்த வீட்டிலிருந்த பணம் 20 ஆயிரம் மற்றும் லேப்-டாப் ,அந்த பெண் அணிந்தருந்த வளையல் செயின் மொத்தம் சுமார் 3 சவரன் கொள்ளையடித்து சென்றும், அதே ஜூலை மாதம் 2வது வாரத்தில் மேற்கு மாம்பலம் பரோடா தெருவில் ஒரு வீட்டினுள் சென்று வீட்டின் உரிமையாளர் கர்நாடக சங்கீத பாடகர் தியாகராஜன் பெயரை கேட்டு உள்ளே சென்று அந்த வீட்டில் இருந்த பெண்ணை அடித்து மிரட்டி கொள்ளையடிக்க முயற்சித்தபோது அந்தபெண் சத்தம் போடவே குற்றவாளிகள் இருவரும் ஓடிச்சென்று விட்டனர். அடுத்த நாள் மதியம் இதே இரண்டு குற்றவாளிகள் நங்கநல்லூர் இந்து காலனி 7வது குறுக்கு தெருவில் மாடியில்  தனியாக இருந்த ஒரு வயதான அம்மா வீட்டிற்கு கேஸ் பழுது பார்க்க செல்வதுபோல் சென்று அந்த பெண்ணின் கை கால்களை கட்டிப்போட்டுவட்டு பீரோவில் இருந்த பணம் ரூபாய் 5 ஆயிரம் மற்றும் நகைகள் சுமார் 32 சவரன் கொள்ளையடித்து  சென்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் அக்டோபர் மாதம் 3 வது வாரம் 18-​ம்தேதி ஆதம்பாக்கம் பாரதிதாசன் 2 வது தெருவில் ஒரு கடையில் இருந்த பெண்ணிடம் பான்பராக் வாங்குவதுபோல் சென்று சுமார் 6 சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓடிச்சென்றுவிட்டனர். 

அதன்பறகு நவம்பர் மாதத்தல் 6-​ம்தேதி இரவு ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் இரண்டு சக்கர வாகனத்தல் சென்ற பெண்ணை மடக்கி அவர் கழுத்தில் இருந்த சுமார் 3 சவரன் நகைளை பிடிங்கிக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். அதன் பிறகு நவம்பர் 22-​ம்தேதி மடிப்பாக்கம் கீழ்கட்டளை அருணாசலம் நகரில் நடந்து போன பெண்ணிடம் மேற்படி இரு குற்றவாளிகளும் சென்று சுமார் 2 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். அடுத்த நாள் மதியம் ஆதம்பாக்கத்தில் ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கேஸ் பழுதுபார்ப்பது போல் சென்று அந்த பெண்மணியை தாக்க கழுத்திலிருந்து செயின் மற்றும் பீரோவல் இருந்த நகை வெள்ளிப்பொருட்கள் சுமார் 3 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களை பிடிக்க சென்னை காவல் ஆணையாளர் கூடுதல் காவல் ஆணையாளர் சட்டம் மற்றும் ஓழுங்கு  உத்தரவுபடி சென்னை தெற்கு மண்டல இணை ஆணையாளர் சண்முகராஜேஸ்வரன் மேற்பார்வையில் துணை ஆணையாளர் தாமஸ்மலை மாவட்டம் அஸ்வின் கோட்னிஸ் தலைமையில் தீவிர முயற்சி மேற்கொண்டு  உதவி ஆணையாளர் மடிப்பாக்கம் சரகம் கண்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு மடிப்பாக்கம் காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சூரியநாராயணன், முத்துசாமி மற்றும் காவல் படையினர் சகிதம் தனிப்படை அமைத்து மேற்படி குற்றவாளிகளை கைது செய்யப்பட்டது. மேற்படி இரு குற்றவாளிகளிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளில் சுமார் 45 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 70 ஆயிரம் லேப்-டாப் ஆகமொத்தம் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் கொள்ளை சம்பவத்தற்கு குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனம், கத்தி இவைகள் கைப்பற்றபட்டுள்ளது. குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்