முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானிய தூதரகத்தை மூட இங்கிலாந்து உத்தரவு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன், டிச.3 - பிரிட்டனில் உள்ள ஈரானிய தூதரகத்தை 48 மணி நேரத்திற்குள் மூட இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஈரானின் தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 5 வது இடத்தில் உள்ள ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இங்கிலாந்தும் பொருளாதார தடையை விதித்துள்ளது. இதை எதிர்த்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்குள் புகுந்து சூறையாடினர். மேலும் தூதரகத்தில் இருந்த ராணியின் படம் மற்றும் அரச கிரீடம் போன்றவற்றையும் வெளியே தூக்கி வந்தனர். இந்த தாக்குதலுக்கு ஈரான் வருத்தம் தெரிவித்த போதிலும் இங்கிலாந்து அரசு அதை ஏற்கவில்லை. 

இந்த நிலையில் ஈரான் நாட்டில் உள்ள அனைத்து இங்கிலாந்து தூதரகங்களையும் மூடவும் கேமரூன் உத்தரவிட்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இங்கிலாந்து திரும்புகின்றனர். இதை தொடர்ந்து லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்தையும் மூட இங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது. இந்த தூதரகத்தில் 18 ஈரானிய அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தொடர்ந்து நார்வேயும், தனது தூதரகத்தை தற்காலிகமாக மூடியுள்ளது. ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்சு ஆகியவை தங்களது தூதர்களை திரும்ப அழைத்துள்ளன. இந்நிலையில் ஈரான் மீது மேலும் புதிய தடைகளை விதிப்பது குறித்து ஆலோசிக்க ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடி விவாதிக்க உள்ளனர். இதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்க திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony