முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய உறவை வலுப்படுத்த அமெரிக்கா விருப்பம்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச.4 - இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  உலகின் மிக பழமையான ஜனநாயக நாடான இந்தியாவுடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடுகளை எட்டுவதற்கான முயற்சிகள் வலுப்படுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்திய - அமெரிக்கர்கள் மற்றும் இந்தியாவுக்கான பிரதிநிதிகள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் கலந்து கொண்டார். 

அவரை வரவேற்று பேசிய போது மேற்கண்ட கருத்தை எம்.பிக்கள் தெரிவித்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு கமிட்டியில் இடம் பெற்றுள்ள உறுப்பினர் கோவர்த் பெருமோன், பிராங்க் பல்லட், கேரிஆக்கர்மேன், ஜோசப்கிரவுளே ஆகிய நாடாளுமன்ற குழுவினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நிருபமாராவ், இந்திய - அமெரிக்க உறவை பலப்படுத்த இதுவே தருணமாகும். இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் ரீதியான உறவு வலுவாக அமைந்துள்ளது. இந்த உறவு மனித குலத்தின் செழுமைக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்று பெருமிதத்தோடு கூறினார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எட்ரோஸ் கூறுகையில், இரு நாட்டு அரசுகளும், அரசியல் தலைவர்களும், தொழில்துறை வல்லுனர்களும், வர்த்தக தளத்தில் முழுமையான வாய்ப்பை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago