முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவை தாமதிக்கவே வர்த்தக பிரச்சினை

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

ராலேகான், டிச.4 - லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்தவே சில்லறை வர்த்தகப் பிரச்சினை உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியிருக்கிறார். லோக்பால் வரம்புக்குள் கடைநிலை அரசு ஊழியர்களை சேர்க்க அரசு தயங்குவதற்கு ராகுல்காந்திதான் காரணமாக இருக்க கூடும் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது, 

இந்த அரசுக்குள் எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லை. சி. பிரிவு அரசு ஊழியர்களை லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஒரு முடிவு எடுக்கிறது. ஆனால் அதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அவரது அறிவுரைப்படிதான் எல்லாம் நடக்கிறது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களை லோக்பால் வரம்புக்குள் சேர்க்க கூடாது என்று அவர்தான் கூறியிருப்பார். அப்படி சேர்க்கவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார் ஹசாரே. 

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குறித்து கேட்ட போது, ஜன் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி விடக் கூடாது என்பதற்காகவே இந்த பிரச்சினையை அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லோக்பால் வரம்புக்குள் சி பிரிவு அரசு ஊழியர்களை கொண்டு வர வேண்டாம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்