முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் நிலவும் ஊழலால் வருத்தமடைந்துள்ளேன்: தலாய்லாமா

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. - 5 - இந்தியாவில் நிலவும் ஊழலால் தான் வருத்தமடைந்துள்ளதாக திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். டெல்லி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலாய்லாமா பேசியதாவது, இந்தியாவில் நிலவும் ஊழலை பார்க்கும் போது என்னுடைய மனம் மிகவும் வேதனையடைந்துள்ளது. எனக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட போது இந்தியா எனக்கு உதவியது. நான் இந்தியாவின் மைந்தன். நான் திபெத் நாட்டை சேர்ந்தவனாக இருந்தாலும் கூட உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் இந்தியனாக என்னை உணருகிறேன். மனிதர்களிடையே அகிம்சை, சத்தியம், மகிழ்ச்சியை பரப்புவதையே எனக்கு வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளேன். இவை மூன்றையும் இந்தியாதான் எனக்கு கற்றுக் கொடுத்தது. இந்தியாவில் கல்வி பயிற்சி மிக சிறப்பாக உள்ளது. எனினும் மதம் கலக்காத ஆன்மீக பயிற்சியையும் சேர்த்து மாணவர்களுக்கு ஊட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற கல்வியே முக்கியமானது. அது ஏழை, பணக்காரர் என்ற இடைவெளியை குறைத்து விடும். இந்த இடைவெளியை அகற்ற மாணவர்கள் ஆயுதம் எடுத்து விடக் கூடாது. அமைதி மற்றும் கருணையால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்தியர்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டமுடையவர்களாக இருக்கிறார்கள். ஆன்மீகம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்க முடியாது. அவ்வாறு இருப்பது மிக பெரிய முரண்பாடாகும் என்றார் தலாய்லாமா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago