முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய திரைப்படங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்-கமல்ஹாசன்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, டிச.- 5 - பல்வேறு மொழிகளில் உள்ள பழைய படங்களை பாதுகாக்க அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்று ஃபிக்கி அமைப்பின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்வர்த்தக(ஃபிக்கி) கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் இந்த அமைப்பின் தலைவரும்  திரைப்பட நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, இந்த கருத்தரங்கில் சினிமாவின் தொழில்நுட்பம்  குறித்து மட்டுமல்லாமல் இன்றைய சூழ்நிலையில் திரைப்படத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதங்கள் நடைபெற்றன. இதில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. முக்கியமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் மத்திய தணிக்கைக் குழு அமைப்பு என்ற பெயரை மத்திய திரைப்பட சான்று வழங்கும் அமைப்பு என மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதேபோல தணிக்கைக்குழு அமைப்புக்கு கத்தரிக்கோல் படம்தான் இலச்சினையாக உள்ளது. அதையும் மாற்ற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. எங்கள் அமைப்பு சுமார் 3500 பழைய திரைப்படங்களை பாதுகாத்து டிஜிட்டல் மயமாக்கும் வசதியைச் செய்துள்ளது. இதற்கான பெரும் செலவை ஃபிக்கி அமைப்பே ஏற்றுக்கொண்டது. இனி இதுபோன்று பழைய திரைப்படங்களை பாதுகாத்து டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியை அரசே மேற்கொள்ள வேண்டும். தற்கான நிதியுதவியை அரசே ஏற்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்