முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் டெல்லியில் நடத்திய கார்,பைக்பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச. - 5 - லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நேற்று தலைநகர் டெல்லியில் கார் மற்றும் பைக் பேரணி நடத்தினார்கள். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் இந்த பேரணியை நடத்தினர்.  முன்னதாக இந்த பேரணியை அன்னா ஹசாரே குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான கிரண்பேடி மத்திய டெல்லியில் ராஜ்காட்டில் இருந்து துவக்கி வைத்தார். இந்த பேரணி தெற்கு டெல்லியில் போய் முடிந்தது. இது குறித்து அஸ்வதி முரளிதரன் என்பவர் கூறுகையில், இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்தோம். அதற்கு அபரிதமான ஆதரவு கிடைத்து விட்டது. சுமார் 400 கார்களும், பைக்குகளும் இதில் கலந்து கொண்டன என்று பெருமையோடு தெரிவித்தார். எல்லா வயதினரும் இதில் கலந்து கொண்டு அரசு தங்களை ஏமாற்றி விட்டதை பேரணியில் வெளிப்படுத்தியதாகவும் அஸ்வதி முரளிதரன் தெரிவித்தார். இது குறித்து சந்தீப் சக்சேனா என்பவர் கூறுகையில், இந்த பேரணியில் பங்கேற்பதற்காகவே என்னுடைய சகோதரனின் காரை நான் இரவல் வாங்கி கலந்து கொண்டேன். இதன் மூலம் அன்னா ஹசாரேவுக்கு எங்களது ஆதரவை தெரிவித்தோம். அவர் ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை என்றும் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்தார். டிசம்பர் 11 ம் தேதியன்று டெல்லியில் உள்ள ஜந்தல்பந்தர் பகுதியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஒரு நாள் எதிர்ப்பு போராட்டம் நடத்தவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு கொண்டு வரவுள்ள வரைவு லோக்பால் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படா விட்டால் மத்திய டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 27 முதல் ஜனவரி 5 ம் தேதி வரை மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்றும் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்