முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோவியத் யூனியன் போல் இந்தியாஉடையும் அபாயம்-பிரதமரிடம்வைகோ

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, டிச. - 6 - முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையேயான சுமூக உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேரளாவின் வாதம் பொய்யானது. கேரளா கூறி வரும் பொய் பிரச்சாரத்தையும், பொய்யான குற்றச்சாட்டையும் நம்பக் கூடாது என்று பிரதமரிடம் தெரிவித்தேன். கேரள அரசே அணையை உடைப்பதாக கூறிய பிறகு அணையின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும். ஆகவே மத்திய போலீஸ் படையை அங்கு குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.  முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலை உருவானால் அது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். சோவியத் யூனியன் போல் இந்தியா சிதறிப் போகும். இந்தியாவின் ஒற்றுமை சிதறிப் போக அனுமதிக்க கூடாது. அணையின் பாதுகாப்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதையும் பிரதமரிடம் சுட்டிக் காட்டினேன். ஆகவே கேரள அரசின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு தன் கடமையில் இருந்து விலகக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு கூறி வரும் அனைத்துமே பொய்யானவை. தவறான தகவல்கள். எனவே கேரள அரசின் பேச்சுக்களையும், பிரச்சாரத்தையும் கேரள மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்