முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரம்புக்குள் சி பிரிவு ஊழியர்கள் ஹசாரே குழு வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, டிச. - 7 - லோக்பால் வரம்புக்குள் சி பிரிவு ஊழியர்களையும் கொண்டு வர வேண்டும் என ஹசாரே குழு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து ஹசாரே குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  அரசு ஊழியர்கள் தனித்தனியாக ஊழலில் ஈடுபடுவது இல்லை. அவர்கள் கூட்டாக இணைந்து செயல்படுகின்றனர். மாநிலங்களில் சி பிரிவு ஊழியர்கள்தான் அதிகபட்ச ஊழலில் ஈடுபடுகிறார்கள். பொதுத்துறை விநியோகத்தில் சுமார் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு சுருட்டல் நடந்துள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. பஞ்சாயத்து அளவிலான பணிகளிலும் பணம் சூறையாடப்படுகிறது. ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது சாத்தியமற்றது என்ற அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.  ஓரிடத்தில் ஊழல் நடந்தால் அதை எந்த பிரிவு ஊழியர்கள் செய்துள்ளனர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? எந்த காவல் நிலையத்தில் புகார் செய்வது? ஒவ்வொரு மாவட்டத்திலும் லோக்பாலுக்கென ஒரு காவல் நிலையமும், மண்டல அளவில் லோக் அயுக்தாவுக்கு ஒரு காவல் நிலையமும் அமைக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகத்தில் ஊழல் நடந்தால் லோக்பால் காவல் நிலையத்திலும், மாநில அரசு அலுவலகத்தில் ஊழல் நடந்தால் லோக் அயுக்தா காவல் நிலையத்திலும் புகார் செய்ய முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்