முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் அறிக்கையை 9-ம்தேதி பார்லி.யில் தாக்கல் செய்யதிட்டம்-சிங்வி

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.- 7 - லோக்பால் அறிக்கையை தயார் செய்வதில் தாமதம் இல்லை என்றும் வருகின்ற 9-ம் தேதி பாராளுமன்றத்தில் அதை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.  லோக்பால் அறிக்கையை காங்கிரஸ் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படலாம் என்றும் கருதப்பட்டது.  இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் லோக்பால் அறிக்கை தயார் செய்யப்படுவதில் தாமதம் இல்லை என்றும் அறிக்கைக்கு இன்று முறைப்படி அங்கீகாரம் வழங்கும் கூட்டம் நடைபெறுகிறது என்றார். அங்கீகாரம் கிடைத்தவும் நாளை மறுதினம் (9-ம் தேதி) அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார். ஒரு தனிநபர் அல்லது ஒரு அமைப்பின் நலன் கருதி இந்த அறிக்கை தயார் செய்யப்படவில்லை. நாட்டின் நலன் கருதியே அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நமது ஆன்மா திருப்திக்காகவும் ஜனநாயக நலனுக்காவும் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷன் கண்காணிப்பின் கீழ் மத்திய அரசின் சி மற்றும் டி.பிரிவு ஊழியர்கள் கொண்டுவர பாராளுமன்ற குழு சிபாரிசு செய்யும் என்றும் சிங்வி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்