முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலை தொடர்புதுறை வளர்ச்சிக்கு கொள்கை உருவாக்கப்படும்:-பிரதமர்

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.- 8 - தொலைதொடர்புத்துறையில் வரி குறைப்பு, 3ஜி ரோமிங்  பிரச்சினை குறித்து துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி அரசு பரிசீலனை செய்யும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். மேலும் தொலைதொடர்புதுறையின் நிலையான வளர்ச்சிக்கும் ஒரு முன்னேற்றமான கொள்கை உருவாக்கப்படும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். புதுடெல்லியில் தொலைதொடர்புதுறையின் உச்சி மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் தொலைதொடர்பு தொழில் குறித்த கவலைகள் பற்றி நான் நன்கு அறிந்துள்ளேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கும் வகிக்கும் இந்த துறையின் நிலையான வளர்ச்சிக்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது. டெல்லியில் பாரதி ஏர்டெல், வோடோபோன், ரிலைன்ஸ் கம்யூனிகேஷன் உள்பட பல தனியார் தகவல்தொடர்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாகி அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஒரேமாதிரியான லைசென்ஸ் கட்டணம், ஒரு நேர ஸ்பெக்ட்ர கட்டணத்தில் இருந்து 3ஜி ரோமிங் கட்டணம் தொடர்பாக தனியார் தகவல்தொடர்பு நிறுவனங்களுக்கும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கும் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்று கூறினார். அதனையடுத்து தொலைதொடர்புத்துறை பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்று பிரதமர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1994 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட தேசிய தொலைதொடர்புதுறை கொள்கைகள் இந்த துறையின் அபரீதமான வளர்ச்சிக்கு ஒரு ஊக்குவிப்பாக அமைந்தது என்றும் மன்மோகன் சிங் கூறினார். நடப்பு 2011-ம் ஆண்டுக்கான தொலைதொடர்புத்துறை கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்கையானது நாட்டில் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் தரமான தொலைதூரதொடர்பு சேவையை அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் மன்மோகன் சிங் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்