முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு 66-வது பிறந்தநாள்

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.- 8 - நாளை (டிசம்பர் 9)  காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தித்கு 66-வது பிறந்தநாள் வருகிறது. ஆனால் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தான் தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று அவர் முடிவு செய்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி கடந்த ஆண்டு பொது மக்களுக்கு  அசவுகரியம் ஏற்படுத்த விரும்பாமல் தனது  65-வது பிறந்த நாளை கொண்டாடவில்லை. இதே போல இந்த ஆண்டும்  பொதுமக்கள் நலன் கருதி  தான் தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறார். இந்த தகவலை  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தன்னை வாழ்த்துவதற்காக தொலைதூரங்களில் இருந்தும் அதிக பணம் செலவழித்தும் காங்கிரஸ் கட்சியினரும்  பொதுமக்களும் டெல்லி வந்து அதிகம் சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் தான் இந்த ஆண்டும்  தனது  பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்றும் சோனியா கூறியுள்ளதாக திவேதி தெரிவித்தார். தனக்கு வாழ்த்துக் கூற டெல்லிக்கு யாரும் வர வேண்டாம் என்றும் அவர் கட்சி தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டும்கூட தனக்கு வாழ்த்து கூற யாரும் டெல்லி வர வேண்டாம் என்று சோனியா வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால்  டெல்லியில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடி அவருக்கு வாழ்த்து கூற முற்பட்டனர். மேலும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலங்களும்கூட  சென்ற ஆண்டு நடத்தப்பட்டன. டிசம்பர் மாத குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த ஆண்டு  ஏராளமான காங்கிரசார் டெல்லிக்கு வந்திருந்தனர்.  அதுபோல இந்த ஆண்டும் பொது மக்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த வேண்டுகோளை சோனியா விடுத்துள்ளதாக திவேதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்