முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் குண்டுவெடிப்புகளில் 28 யாத்ரீகர்கள் பலி

புதன்கிழமை, 7 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

ஹில்லா, டிச.- 8 - ஈராக்கில் தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 70 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.  மொஹரம் பண்டிகையையொட்டி புனித தலங்களுக்கு சென்றுகொண்டிருந்த சியா பிரிவு முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. தலைநகர் பாக்தாத்துக்கு அருகேயுள்ள ஹில்லா நகரில் யாத்ரீகர்கள் குழுமியிருந்த இடத்தில் காரினுள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 45 காயம் அடைந்தனர். மற்றொரு இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இருவர் பலியாகினர். இதுபோலவே பாக்தாத் நகரில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony