முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்பிரமணிய சுவாமி வாக்குமூலம் அளிக்க அனுமதி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.9 - ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்க்கக்கோரும் வழக்கில் சுப்பிரமணிசுவாமி சாட்சிகளை விசாரிக்கவும் அவரே கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் சி.பி.ஐ.சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மார்க்கெட் விலையை காட்டிலும் மிகவும் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையை நிர்ணயம் செய்தது அப்போது தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும்தான். அதனால் இந்த வழக்கில் தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்கக்கோரி ஜனதா கட்சி தலைவர் டாக்டர். சுப்பிரமணியசுவாமி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியசுவாமி ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்ப்பதோடு அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்தபோது நிதி அமைச்சகத்தில் இணை இயக்குனராக எச்.சி.அவஸ்தி, இணை செயலாளராக சிந்துஸ்ரீ ஹுல்லர் ஆகியோர் இருந்தனர். அவர்களுக்கும் சி.பி.ஐ.கோர்ட்டு சம்மன் அனுப்ப வேண்டும் என்றார். மேலும் தாமே நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு நீதிபதி ஓ.பி.சைனி ஒத்திவைத்தார். அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது இந்த வழக்கில் சுப்பிரிமணியசுவாமியேஅவரே கோர்ட்டில் ஆஜராகி சாட்சிகளை சாட்சிகளை விசாரிக்கவும் அவர் வாக்குமூலம் அளிக்கவும் நீதிபதி சைனி அனுமதித்தார். சாட்சிகளை விசாரிப்பதால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிப்பதில் எனக்கு உதவியாக இருக்கும் என்று பின்னர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்தார். வருகின்ற 17-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது சுப்பிரமணியசுவாமி வாக்குமூலத்தை கோர்ட்டு கேட்டு பதிவு செய்யும். அதில் போதுமான சாராம்சம் இருக்குமானால் அந்த 2 பேர்களுக்கும் சம்மன் அனுப்புவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து கோர்ட்டு முடிவு செய்யும்.  அந்த 2 சாட்சிகளிடத்தில் விசாரணை நடத்துவது குறித்து கோர்ட்டு ஆய்வு செய்யும் என்றும் சி.பி.ஐ.அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அந்த 2 பேரிடம் விசாரணை நடத்த சுப்பிரமணியசுவாமிக்கு கோர்ட்டு அனுமதிக்கவில்லை என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்