முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரவில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிப்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.9 - ஆந்திராவில் பூமிக்கடியில் யுரேனியம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்று ராஜ்யசபையில் தெரிவிக்கப்பட்டது. இதை உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். அணுமின்சாரம் உற்பத்தி செய்வதற்கு யுரேனியம் மிகவும் முக்கியமான மூலப்பொருளாகும். பூமிக்கடியில் இருக்கும் இந்த யுரேனியம் படவத்தை கண்டுபிடிப்பதில் இந்திய அணுசக்தி துறையின் ஒரு பிரிவான ஆய்வு மையமானது நாடு முழுவதும் பூமியை தோண்டி ஆய்வு செய்து வருகிறது. ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் ஏற்கனவே இருக்கும் துமலபல்லி யுரேனிய சுரங்க பகுதியில் ஆய்வை மேற்கொண்டது. இதில் யுரேனியம் இருப்பது தெரியவந்ததுள்ளது. அந்த பகுதியில் பூமிக்கடியில் சுமார் 63 269 டன் அளவுக்கு யுரேனியம் இருப்பது தெரியவந்துள்ளது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை நேற்று ராஜ்யசபையில் பிரதமர் அலுவலகஇணை அமைச்சர் வி.நாராயணசாமி கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார். அதேசமயத்தில் இது பெரிய யுரேனிய சுரங்கம் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இருந்தபோதிலும் இந்தியாவில் அணுமின் உற்பத்தியை பெருக்க இந்த யுரேனியம் பயன்படும். இந்தியாவுக்கு ரஷ்யாவில் இருந்துதான் அதிக அளவில் யுரேனியம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதுவும் அந்த யுரேனியம் செறிவூட்டப்பட்டது. மேலும் பிரான்ஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளிலும் இருந்தும் யுரேனியம் இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் நாராயணசாமி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்