முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் 64 பேர் பலி: ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

ஐ.நா, டிச.9 -  ஆப்கானிஸ்தானில் இரு வழிபாட்டு தலங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் தற்கொலைப்படை  தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் நேற்று முன்தினம் 60 பேர் கொல்லப்பட்டனர்.

இதே போல மார் இ ஷெரீப் என்ற நகரில் ஒரு மத வழிபாட்டு தலத்தில் நடந்த வெடி குண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த இரு தாக்குதல்களும் இஸ்லாமியர்களின்  மொஹரம் பண்டிகையின் போது  நடத்தப்பட்டுள்ளது.

அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு தான் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக பான் கி மூன் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் தான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்த தகவலை நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் உள்ள பான் கி மூன்னின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதே போல ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. தூதுக்குழு அலுவலகமும் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony