முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் சக்கரமில்லா ரயில்கள் விரைவில் அறிமுகம்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச.9 - டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் சக்கரமில்லா ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. இதனை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை இணையமைச்சர் சவுகத்ராய் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மக்லெவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த சக்கரமில்லா ரயில் திட்டம் இப்போது கருத்துரு நிலையில்தான் உள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இவ்வாறு சவுகத்ராய் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்