முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்பு பண பிரச்சினை: எம்.பி.க்களுக்கு முகர்ஜி விளக்கம்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.9 - கறுப்பு பண பிரச்சினை குறித்து காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சில முக்கிய விவரங்களை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஏற்கனவே விலைவாசி உயர்வு, சில்லரை வணிகத்தில்  அன்னிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பிய எதிர்க்கட்சிகள் அடுத்த வாரம் கறுப்பு பணம் குறித்த பிரச்சினையை கிளப்ப தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த  நிலையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்  பாராளுமன்ற அவை முன்னவரும் மத்திய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி பங்கேற்றார்.

அப்போது வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் தொடர்பான சில முக்கிய அம்சங்களை அவர் விளக்கினார்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் மறைத்து வைத்துள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டுக்கொண்டு வர மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களிடம் விளக்கினார்.

சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் அமெரிக்கர்கள் மறைத்து வைத்துள்ள கறுப்பு பணம் தொடர்பான தகவல்களை அமெரிக்கா மட்டும் எப்படி பெறுகிறது என்று அப்போது முகர்ஜியிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முகர்ஜி , வெளிநாடுகளில் இந்தியர்கள் மறைத்து வைத்துள்ள கறுப்பு பணம் தொடர்பான தகவல்களை மத்திய அரசும் பெற்று வருகிறது என்று பதில் அளித்தார்.

வெளிநாடுகளில் கறுப்பு பணம் மறைத்து வைக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் தனது கட்சி எம்.பி.க்களுக்கு விளக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்