முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்லா போட்டவர்கள் எல்லாம் காந்தியா? ஹசாரே மீது பால்தாக்கரே தாக்கு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, டிச. - 10 - குல்லா போட்டு விட்டால் உங்களுக்குள் காந்தி இருக்கிறார் என்று அர்த்தமாகி விடாது என்று ஹசாரே மீது சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.  ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நம்பகத்தன்மை குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. இந்த இயக்கமே மத்திய உணவு அமைச்சர் சரத்பவாருக்கு எதிராக உருவாக்கப்பட்டது போல தோன்றுகிறது. இந்தியாவிலேயே மட்டும்தான் ஊழல்வாதியா? மற்றவர்கள் எல்லாம் உத்தமர்களா? லோக்பால் மசோதாவே பவாருக்கு எதிராக உருவாக்கப்பட்டதா? ஏன் ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். நீங்களும், பவாரும் மராட்டியத்தை சேர்ந்தவர்கள். அப்படியிருந்தும் மராட்டியத்தின் பேரை கெடுக்க உங்களுக்கு என்ன ஆர்வம்? ஏன் பவாரை மட்டும் குறி வைக்கிறீர்கள். என்று தனது பத்திரிக்கையில் கடுமையாக பால்தாக்கரே ஹசாரேவை சாடியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்