முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் டே கொலை வழக்கில் பத்திரிகையாளர் வோரா சிறையில் அடைப்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை. டிச,- 10 - மும்பை பத்திரிகையாளர்  ஜோதிர்மாய் டே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் ஜிகினா வோரா நேற்று  சிறையில் அடைக்கப்பட்டார். மும்பையிலிருந்து வெளிவரும் மிட்டே என்ற பத்திரிகையின் பத்திரிகையாளரான ஜோதிர்மாய் டே கடந்த  கடந்த ஜூன் மாதம் 11 ம் தேதி மும்பையில் அவரது வீட்டிற்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உத்தரவின் பேரில் இந்த படுகொலையை கூலிப்படையினர்  செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சில முக்கிய குற்றவாளிகளை மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளர். சோட்டா ராஜனின் கும்பலை சேர்ந்த சதீஷ் கல்யா உள்ளிட்ட சில முக்கிய குற்றவாளிகளை கைது செய்த போலீசார் இந்த கொலை வழக்கில் மும்பை பத்திரிகையாளர் ஜிகினா  வோரா என்பவரையும்  சோட்டா ராஜனின் கும்பலை சேர்ந்த பால்சன் ஜோசப் என்பவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் போலீசார் ஏற்கனவே தங்களில் எடுத்து விசாரணை நடத்தி விட்டனர். இந்த நிலையில்  இவர்கள் இருவரும் நேற்று  மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்கள் இருவரையும் வருகிற 20 ம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும்  சிறையில் அடைக்கப்பட்டனர். ஜோதிர்மாய் டே பற்றிய  தகவல்களை  சோட்டா ராஜனுக்கு கொடுத்ததாகவும்  கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளுக்கு  நம்பர் கொடுத்ததாகவும்  ஜிகினா வோரா மீது குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago