முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தி பிறந்தநாள் அத்வானி- தலைவர்கள் வாழ்த்து

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.- 10 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று வாழ்த்து கூறினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று 66 வது பிறந்த நாள்.  ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடவில்லை.  கடந்த ஆண்டு  தன்னை வாழ்த்த யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட போதிலும் கூட  காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமான பேர் டெல்லியில் கூடி  ஊர்வலம்  போன்ற நிகழ்ச்சிகளை  நடத்தினர். இந்த ஆண்டும் கூட சோனியா காந்தி தனது பிறந்தநாளுக்காக தொலை தூரங்களில் இருந்து அதிக பணம் செலவழித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் டெல்லிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி இந்த ஆண்டு காங்கிரசார் யாரும டெல்லியில் அவரது பிறந்த நாளை அவ்வளவு விமரிசையாக கொண்டாடவில்லை. என்றாலும்  பாராளுமன்றத்தில்  அவருக்கு பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

பாராளுமன்றத்தின் லோக் சபை எதிர்க்கட்சிகளின் அமளியால் நேற்று நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் சபை கூடுவதற்கு முன்பாக சோனியா காந்தியை  பா.ஜ.க.மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங், ஆனந்த் குமார், ஹரீன் பதக், மற்றும்  இடது  கம்யூனிஸ்டு பாசுதேப் ஆச்சார்யா, வலது கம்யூனிஸ்டு  குருதாஸ் தாஸ் குப்தா,  பகுஜன் சமாஜ் தாராசிங்சவுகான், தேசியவாத காங்கிரஸ் சுப்ரியா சுலே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  தீபா தேஷ்முக், மீனாட்சி நடராஜன் உள்ளிட்ட முக்கிய எம்.பி.க்களும் சோனியாவுக்கு வாழ்த்து கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்