முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா சம்பவம் பலியானவர்களுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, டிச.- 11 - மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஏ.எம்.ஆர்.ஐ. என்ற தனியார் மருத்துவ மனையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 90 க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. இதனிடையே இந்த விபத்தில் பலியானவர்களுக்கு பொதுமக்கள் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனை முன்பாக ஒரு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு அங்கு அவர்களது உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த உடல்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நீண்ட வரிசையில் நின்று மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். எங்களுடைய அஜாக்கிரதையால் பல உயிர்களை இழந்துவிட்டோம் என்று அந்த மலர் வளையத்தில் எழுதப்பட்டு இருந்தது. இந்த மருத்துவமனையில் மேலும் பல உடல்கள் சிக்கி இருக்கக்கூடும்  என்று கருதி உள்ளூர் மக்கள் அந்த மருத்துவமனை வாயிலில் திரளாக திரண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசில் சரணடைந்த மருத்துவ மனையின் 6 இயக்குனர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த மருத்துவமனையின் உரிமத்தை மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி  ஏற்கனவே ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க பிரதமர் உத்தரவிட்டார். கடுமையாக காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பிரதமர் தேசிய  நிவாரண நிதியில் இருந்து  வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் மூச்சுத் திணறியும், மேலும் பலர் தீயில் சிக்கியும் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி இந்த கோர தீ விபத்து ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago