முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை-கே.எம்.மணி

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கோட்டயம், டிச. - 11 - முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கேரள அமைச்சர் கே.எம். மணி தெரிவித்துள்ளார்.  முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருந்து வருகிறது. எனவே அந்த அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா வலியுறுத்தி வருகிறது. ஆனால் முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது. புதிய அணை கட்டத் தேவையில்லை என்று தமிழகம் தனது வாதத்தை எடுத்துரைத்து வருகிறது. 1900 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்டது கல்லணை. அந்த அணையே வலுவாக செயல்பட்டு வருகிறது.  ப்படியிருக்க 116 ஆண்டுகள் பழமையான அணை என்று முல்லைப் பெரியாறு அணையை சொல்வது எப்படி நியாயமாகும். அந்த அணை இடிந்து விழுந்து விடும் என்று சொல்வதும் அர்த்தமற்ற ஒன்று என்று தமிழகம் தனது வாதத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டுக்கும், கேரளத்துக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. ஆனால் நஷ்டம் என்னவோ, கேரளாவிற்குத்தான். இங்கிருந்து செல்லும் காய்கறிகள், பூக்கள், முட்டை, அரிசி போன்ற எந்த பொருட்களும் கடந்த சில நாட்களாக கேரளாவிற்கு செல்லவில்லை. இதனால் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இதில் பாதிக்கப்படுவது என்னவோ கேரள மக்கள்தான். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் கேரள அரசியல்வாதிகள் இடைத்தேர்தலுக்காக முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு மக்கள் வாழ்வோடு விளையாடி வருகிறார்கள். புதிய அணை கட்டப் போவதாக சட்டசபையில் தீர்மானமும் போடுகிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பத்திரிக்கைகளில் ஒரு பக்க விளம்பரம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பற்றிய உண்மை நிலவரங்களை எடுத்துரைத்தார். இதற்கு கேரள அமைச்சரும், கேரள எம். காங்கிரஸ் தலைவருமான மணி பதிலளித்துள்ளார். இது பற்றி கோட்டயத்தில் நடந்த தர்ணா போராட்டத்தின் போது அமைச்சர் மணி கூறியதாவது,  முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. புதிய அணை கட்டுவது ஒன்றுதான் எங்களுக்கு தீர்வு. எங்களுடைய பகுதியில் நாங்கள் புதிய அணை கட்டுகிறோம். இதற்கு தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை. மற்றவர்களின் பெருந்தன்மையும் எங்களுக்கு தேவையில்லை. எனவே யார் நெருக்கடி கொடுத்தாலும் சரி, இந்த விஷயத்தில் பின்வாங்க மாட்டோம். எனவே தமிழ்நாட்டை நாங்கள் கேட்பதெல்லாம் இந்த விஷயத்தில் ஒத்துழைத்து பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும். அணை வலுவாக உள்ளது என்று தமிழகம் கூறுகிறது. பலவீனமாக இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் ரூர்கி ஐ.ஐ.டி. நிறுவனம் எங்களது பயம், கவலை நியாயமானது என்று கூறியிருக்கிறது. எனவே தமிழ்நாடு, கேரளா இடையே பேச்சுவார்த்தை நடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கேரள அமைச்சர் மணி தெரிவித்தார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்