முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 காங். எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஆந்திர முதல்வர் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச. - 12 - அரசுக்கு எதிராக ஓட்டுப் போட்ட 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மேலிட தலைவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.  ஆந்திராவில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தெலுங்குதேசம் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் ஆந்திர சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆந்திர அரசு வெற்றி பெற்றது என்றாலும் 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளனர். இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரையும் பதவி நீக்கம் செய்யவும் கட்சியில் இருந்து நீக்கவும் ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியும், ஆந்திர சட்டசபையின் எம்.எல்.ஏக்கள் குழுவும் முடிவு செய்துள்ளன. இதற்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டியை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று கிரண்குமார் ரெட்டி டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர காங்கிரஸ் விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோரை கிரண்குமார் ரெட்டி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண்குமார் ரெட்டி, கட்சியின் கட்டளையை மீறி எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்த 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்