முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவுடன் அஜீத்சிங் சந்திப்பு கூட்டணி குறித்து முக்கிய பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 12 - உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் அஜீத்சிங் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்கிறது. இதற்காக அஜீத்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். உ.பி. சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்காக ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சித் தலைவர் அஜீத்சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். கூட்டணியை உறுதி செய்த அஜீத்சிங், பின்னர் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம் உ.பி. சட்டசபை தேர்தலில் அஜீத்சிங் கட்சி காங்கிரசுடனான கூட்டணியில் இடம்பெறுகிறது. இந்த கூட்டணி அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் அஜீத்சிங் இணைவதால், உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு மேலும் பலம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியில் அஜீத்சிங் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. இதனால் கூட்டணியில் அஜீத்சிங் கட்சிக்கு 45 முதல் 50 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.  மாநிலத்தின் மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 403 ஆகும். தற்போதுள்ள சட்டசபையில் அஜீத்சிங் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 20 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். கூட்டணியில் அஜீத்சிங்கிற்கு மத்திய மந்திரி பதவியும் வழங்கப்படுகிறது. அஜீத்சிங் முக்கிய இலாகாவை தனக்கு ஒதுக்குமாறு கேட்கிறார். இதனால் அவருக்கு விமான போக்குவரத்து இலாகா வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இன்னும் சில தினங்களில் அஜித்சிங் பிரதமரை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்