முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரண்குமார் ரெட்டிக்கு எதிராக தாக்கல் செய்த மனு வாபஸ்

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச. - 12 - ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அதன் மனுதாரர் இப்போது வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆந்திராவில் ரோசய்யாவுக்கு பிறகு புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் முதல்வர் பதவியில் நீடிக்கக்கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திர எம்.எல்.ஏ. எஸ்.வேணுகோபாலாச்சாரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் கிரண்குமார் ரெட்டி மீது ஆந்திர சட்டசபையில் தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்து கிரண்குமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றிபெற்றது. இதையடுத்து அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ்பெறுவதாக வேணுகோபாலாச்சாரி கூறினார். இதையடுத்து அவரது வக்கீல் சதீஷ்கல்லா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக்மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு ஆஜராகி தாம் தாக்கல் செய்த தனது மனுதாரரின் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதனை ஏற்று அவ்வாறே வாபஸ்பெற நீதிபதிகள் அனுமதி வழங்கினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்