முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு ராணுவ ரகசியங்களை கொடுத்த இந்திய ராணுவ வீரருக்கு சிறை தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 12 - பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை வழங்கிய இந்திய ராணுவ வீரருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.  கடந்த 2006 ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த அனில்துபே என்ற வீரர் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்ட் ஒருவருக்கு இந்திய ராணுவத்தின் ரகசியங்களை வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு நுட்பமான தகவல்களை துபே பிரதி எடுத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது வீட்டிற்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்  ஒருவர் அடிக்கடி வந்து சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. அந்த ஊழியர் மூலமாக இந்த தகவல்களை அனில் குமார் துபே பாகிஸ்தான் உளவு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தூதரக ஊழியரிடம் ஒரு பையை அனில்துபே கொடுத்ததை ரகசிய போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அந்த பையில் ராணுவம் சம்பந்தப்பட்ட சி.டி.க்களும், இதர ஆவணங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனில்துபேயை போலீசார் கைது செய்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்துவந்த டெல்லி மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.குப்தா, இந்திய ராணுவ வீரர் அனில்துபாவுக்கு (39) 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்புக்கூறினார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்