முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 12 - பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி 2009 ல் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர் ராஜ்குந்ராவை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வயது 36. கடந்த சில நாட்களாகவே ஷில்பா ஷெட்டி குறித்து மும்பையில் வதந்தி பரவியது. இதுகுறித்து அவரது ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி கேட்டிருந்தனர். இதையடுத்து ஷில்பா ஷெட்டி நான் கர்ப்பமாக இருப்பது உண்மைதான். வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் இது. எல்லோருடைய ஆசியையும் நாடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஷில்பா இதுவரை 40 படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுவார். லண்டனில் நடந்த டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ் பெற்றார். தற்போது த டிசையர் என்ற படத்தை சீன நாட்டுடன் சேர்ந்து தயாரித்து வருகிறார். இதில் சீன நடிகர் ஜெய் லீங் நடிக்கிறார். பிரபல ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஷில்பா ஷெட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony