முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோவில் பயங்கர பூகம்பம் 11 வயது சிறுவன் உள்பட பலர் பலி

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

மெக்சிக்கோ சிட்டி,டிச.- 12 -மெக்சிக்கோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் நேற்று பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி இருந்தது. பூகம்பத்திற்கு 11 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலியாகிவிட்டனர் என்று முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால் பலி எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பூகம்பமானது மெக்சிக்கோ சிட்டியில் இருந்து சுமார் 133 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கே பூமிக்கு அடியில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டியிருந்தது. பூகம்பத்தின் அளவு ஆரம்பத்தில் 6.7 ஆக இருந்தது. அடுத்த 2 நிமிடங்களில் இது 6.5 ஆக குறைந்தது என்று மெக்சிக்கோ பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கட்டிடங்கள் மற்றும் இதர சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்ற விபரம் தெரியவில்லை. இருந்தபோதிலும் பூகம்பத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிக்கோ சிட்டியில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்த நாடு இருப்பதால் சுனாமி அபாயம் இருக்கலாம் என்ற அச்சம் மக்களிடத்தில் நிலவுகிறது. ஆனால் சுனாமி அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூகம்பத்தால் பெரிய அளவுக்கு சேதம் இல்லை. இருந்தபோதிலும் எங்கேயாவது சேதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி அந்த நாட்டு அதிபர் பெலிபி கால்டிரோன் தெரிவித்துள்ளார். ஆனால் மெக்சிகோ நகரின் ஒரு பகுதியில் மின்சார துண்டிப்பும் செல்போன் தொடர்பும் துண்டித்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்