முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கொத்தா தீவிபத்து: மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, டிச. - 12 - 92 பேர் பலியான கொல்கத்தா தீவிபத்து சம்பவத்தில் மருத்துவமனை நிர்வாகிகள் 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த கோர தீ விபத்து தொடர்பாக ஏ.எம்.ஆர்.ஐ. தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் 7 பேர் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் 6 பேர் ஏற்கனவே கோர்ட்டில் ஆஜப்படுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரி பணிகளுக்காக ஒருவர் விட்டு வைக்கப்பட்டுள்ளார். நோயாளிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகும் பிற நடைமுறைகள் முடிந்த பிறகும் அவர் இன்று ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்.  மருத்துவமனையில் விபத்துகால அவசர வழிகளோ, தீ தடுப்பு உபகரணங்களோ அமைக்கப்படாததுதான் இந்த கோர விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட சில மணி நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் உதவுவதற்காக ஓடி வந்துள்ளனர். ஆனால் அவர்களை மருத்துவமனை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. தீயணைப்பு வாகனங்களும் தாமதமாக வந்ததால்தான் இவ்வளவு பேர்பலியாகி இருப்பதற்கு காரணமாகும். இந்த நிலையில் மருத்துவமனையின் இயக்குனர்கள் 6 பேரிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட இருக்கிறது. மருத்துவமனை பொறுப்பில் இருக்கும் மற்றொரு நிர்வாகியிடமும் இன்னும் இரண்டு நாட்களில் தனியாக விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்