முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு: சி.பி.ஐ. 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.13 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. 3-வது குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் தாக்கல் செய்தது. இதில் 3 கம்பெனிகள், 5 தனி நபர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கிரிமினல் சதிவேலை, ஏமாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களை சி.பி.ஐ. சுமத்தியுள்ளது. நாட்டிலேயே ஏன் இந்த உலகத்திலேயே நடந்துள்ள மிகப்பெரிய ஊழல் களில் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஒன்றாகும். இந்த ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் கனிமொழி உள்பட 6 பேர் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போராடி ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த மெகா ஊழலில் 2 தடவை குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுசில் இருக்கும் சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கனிமொழி உள்பட 6 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அதன் பின்னரும் விசாரணையை தொடர்ந்த சி.பி.ஐ. தனது 3-வது குற்றப்பத்திரிகையை அதே சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 106 பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 3 கம்பெனிகள், 5 தனிநபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். எஸ்ஸார் புரமோட்டர் டைரக்டர் அனுஷ்மன் ரூயா,எஸ்ஸார் துணைத்தலைவர் ரவி ரூயா,எஸ்ஸார் குரூப் டைரக்டர் (யுக்தி, திட்டம்) விகாஸ் சர்ப், லூப் டெலகாம் கிரன் ஹைத்தான், ஐ.பி.ஹதான் ஆகியோர் 3-வது குற்றப்பத்திரிகையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய கிரிமினல் சட்டப்பிரிவு 420,120 (பி) ஆகியவைகளின் கீழ் கிரிமினல் சதி மற்றும் மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாந்தா டிரேடிங் புரமோட்டராக ஐ.பி.ஹைதான் இருக்கிறார். மேலும் லூப் டெலகாமில் முக்கிய பங்குதாரராகவும் இருக்கிறார். ரவி ரூயாவின் சகோதரி கிரன் ஹைதான். இவர்,ஐ.பி.ஹைதானின் மனைவியாவார். லூப் டெலகாம் பிரைவேட் லிமிடெட், லூப் மொபைல் இந்தியா லிமிடெட், எஸ்ஸார் டெலி ஹோல்டிங். 3-வது குற்றப்பத்திரிகையில் அரசு ஊழியர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கு சி.பி.ஐ.நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராது. இதை டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம்தான் விசாரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்