முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்தாரி பதவி விலக மாட்டார்: பாக். பிரதமர் திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச.13 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு பக்கவாதம் எல்லாம் இல்லை. அவரது உடல்நிலை தேறி வருகிறது. சர்தாரி பதவி விலகப் போவதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசாக் கிலானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு லேசான மாரடைப்பும், பக்கவாதமும், முகவாதமும் ஏற்பட்டதால்தான் அவர் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார் என்றும் உடல்நிலை காரணமாக அவர் பதவி விலகக் கூடும் என்றும் தகவல்கள் வந்தன. இதை பாகிஸ்தான் பிரதமர் கிலானி மறுத்துள்ளார். மேலும் பாகிஸ்தான் ராணுவம் சர்தாரியை பதவியை விட்டு தூக்க சதி திட்டம் ஏதும் தீட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து கிலானி பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 

சர்தாரி இதய நோய்க்கு சிகிச்சை பெறவே துபாய் சென்றுள்ளார். அவரது உடல் நலம் தேறி வருகிறது. அவர் 2 வாரம் நன்றாக ஓய்வெடுத்து விட்டு நாடு திரும்புவார். சர்தாரி ராஜினாமா கடிதம் ஏதும் எழுதவில்லை. அவர் எதற்காக ராஜினாமா கடிதம் எழுத வேண்டும். அவருக்குத்தான் நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவு உள்ளது. ராணுவம் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக வந்த செய்திகள் வெறும் வதந்திகள்தான் என்றார். 

அல்கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தான் ராணுவம் தனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும், தனக்கு உதவ வேண்டும் என்று கோரி சர்தாரி அமெரிக்க உயரதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பிரச்சினையாகி விட்டது. இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவிருந்தார். ஆனால் அதற்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு துபாய் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago