முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகச் சிறிய டி.வி. விரைவில் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

லண்டன், டிச.13 - பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு மிகச் சிறிய டி.வி. தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் டி.வி.க்கள் வந்துவிட்டன. ஆனால் அவற்றை ஒரே இடத்தில் வைத்துதான் பார்க்க முடியும். ஆனால் டி.வி.யை சுருட்டி மடக்கி எடுத்துச் செல்லக் கூடிய வகையிலான டி.வி.யை இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை. விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளனர். ரோமத்தைவிட 1 லட்சம் மடங்கு மெல்லிய சின்னஞ்சிறு ஒளிப்பான்களை உருவாக்கியுள்ளனர். அதற்கு குவாண்டம் டாட்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதன் மூலம் மிக மெல்லிய டி.வி. திரைகளை உருவாக்க முடியும். அவற்றை பிளக்சிபில் பிளாஸ்டின் சீட்டில் ஒட்டி அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லத்தக்க வகையில் தயாரித்துள்ளனர். இந்த மிகச்சிறிய பாக்கெட் டி.வி.க்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ளன. இந்த அதிநவீன சிறிய டி.வி.க்களை ஆசிய எலக்ட்ரானிக் கம்பெனிகளின் உதவியுடன் தயாரித்ததாக மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்