முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: பாக்.

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச.13 - பாகிஸ்தான், அமெரிக்கா இடையேயான மோதலின் உச்சக்கட்டமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க உளவு மற்றும் தாக்குதல் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது திட்டமிட்டே நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று குற்றம் சாட்டியவர் கிலானி. அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தார் அவர். நேட்டோ படையின் வாகனங்கள் தமது நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கும் எண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதனிடையே பாகிஸ்தான் அரசு புதிய ராணுவ கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தால் அதிரடி தாக்குதல் நடத்தலாம் என அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மற்றும் நேட்டோ படைகளை எதிரிகளாக கருதி சுட்டு வீழ்த்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago