முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகளின் இரட்டை வேடம்: அம்பிகா சோனி தாக்கு

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.13 - பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன என்று மத்திய மந்திரி அம்பிகா சோனி குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்திற்கு வெளியே மத்திய செய்தி மற்றும் ஒலி-ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன என்றார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதைப்பற்றி விவாதிப்பதற்கு ஜனநாயகத்தில் ஒரு இடம் இருக்கிறது. அதுதான் பாராளுமன்றம். விவாதிப்பதற்கு இதுதான் சிறந்த மன்றமாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு பேச்சும், பாராளுமன்றத்திற்கு உள்ளே ஒரு பேச்சும் பேசி வருகிறார்கள் என்று அவர் கூறினார். 

பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் லோக்பால் பிரச்சனை பற்றி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்கு  வெளியே ஏன் குரல் எழுப்புகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளின் இந்த  இரட்டை வேடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு பிரச்சனை பற்றி ஆளும் கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே ஏதேனும் கருத்துக்களை தெரிவித்தால் அதை குற்றம் கூறும் எதிர்க்கட்சிகள், அவர்கள் தாங்கள் மட்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடலாமா? வலுவான லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அதுகுறித்து பாராளுமன்றத்தில்தான் விவாதிக்க வேண்டுமே தவிர, வெளியில் கருத்தை சொல்லக் கூடாது என்றும் அம்பிகா சோனி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்