முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே போராட்டத்தில் அரசியல்வாதிகள்... தவறில்லை

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.13 - அன்னா ஹசாரே போராட்ட மேடைகளில் அரசியல்வாதிகள் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை என்று மத்திய மந்திரி சரத்பவார் கூறியுள்ளார். மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  தலைவருமான சரத்பவார் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், அன்னா ஹசாரே போராட்ட மேடையில் அரசியல்வாதிகள் கலந்துகொள்வதிலும், அதில் லோக்பால் மசோதா குறித்து பேசுவதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பாராளுமன்றம் என்ற உச்சபட்ச பேரவையை மீறும் வகையில் எதையும் பேசக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு பிரச்சனை குறித்து எந்த இடத்தில் வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஒரு கருத்தரங்கிலோ, ஒரு திறந்தவெளி மைதானத்திலோகூட இப்படி விவாதங்களை நடத்தலாம். இருந்தாலும் ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரே போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளுமே பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன என்றும், பாராளுமன்றத்தை நாம் ஒருபோதும் மீறக்கூடாது என்றும் அவர் கூறினார். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசியல் கட்சிகள் பங்கேற்றது சரியா? என்று கேட்ட கேள்விக்குத்தான் சரத்பவார் மேற்கண்ட பதிலை தெரிவித்தார். தனது இல்லத்தில் தனது 71- வது பிறந்தநாளை முன்னிட்டு திரளாக கூடியிருந்த தனது கட்சி தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெற்ற சரத்பவார், பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். நேற்று முன்தினம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற அன்னாஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்று வலுவான லோக்பால் மசோதா குறித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள் என்ற கேட்டதற்கு கருத்துக்களை சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அந்த கருத்து நல்ல கருத்தாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் எதுவுமே பாராளுமன்றத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்