முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதாந்திர கல்வி உதவித்தொகை: முதல்வருக்கு பாராட்டு

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.14 - ஆதிதிராவிட மற்றும் பிறப்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மாதாந்திர கல்வி உதவித் தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிறப்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்க தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருப்பதை பாராட்டி வரவேற்கிறேன்.

சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக முனைப்புடன் செயல்பட்டுவரும் முதல்வர் அதன் தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக பல்வேறு உதவிகளை வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் கல்விப்புரட்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர், தொடர்ந்து சத்துணவுத்திட்டத்தின் மூலம் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலிய எம்.ஜி.ஆர் ஆகியோர் வரிசையில், உயர்கல்விக்கும், கல்லூரிப்படிப்பிற்கும் மட்டும் உதவித்தொகை என்றில்லாமல் 1-ம் வகுப்பிலிருந்தே உதவித்தொகை வழங்கியிருப்பது சிறப்பிற்குறியது. 100 சதவிதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டுமானால், பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கல்வியைத் தொடராமல் இடையில் நின்றுவிடுவது தடுக்கப்பட வேண்டும். முதல்வர் அறிவிப்பின் அடிப்படையில் மாணவர்கள் முழுமையாக பள்ளிப்படிப்பை நிறைவு பெற்று 100 சதவிதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் வருங்காலத்தில் திகழ்வது உறுதி என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இலவசங்களும் மானியங்களும் கல்விக்கும், வேளாண்மைக்கும் கிடைப்பதை எங்கள் இயக்கத்தின் கொள்கையாகக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்