முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு பார்சல்

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

பாரீஸ், டிச.14 - பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கிரேக்க நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு மர்ம வெடிகுண்டு பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரேக்க தூதரக அலுவலகத்திற்கு இத்தாலியில் இருந்து மர்ம வெடிகுண்டு பார்சல் ஒன்று வந்தது. இந்த பார்சலில் இருந்தது வெடிகுண்டுதான் என்பது உறுதியானதால் அதை பத்திரமாக எடுத்து அந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே இத்தாலியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு கொரியர் தபால் மூலம் வெடிகுண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து இத்தாலியில் இருந்து மிரட்டல் கடிதங்களும், துப்பாக்கி குண்டு பார்சல்களும் வந்ததாக கிரேக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தற்போது அங்கிருந்து மீண்டும் வெடிகுண்டு பார்சலும் வந்துள்ளது. இதை அனுப்பியது யார் என்பது தெரியவில்லை. 

இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் சமீபத்தில் ஜெர்மனிக்கும் வந்துள்ளது. இந்த மிரட்டலை இத்தாலியில் உள்ள தீவிரவாத அமைப்பான அனார்சிஸ்ட் என்ற அமைப்பு விடுத்திருந்தது. இந்த அமைப்புதான் கிரேக்க தூதரக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு பார்சலை அனுப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony