முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியில் குறைப்பு

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,டிச.14- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி உதவியில் 700 மில்லியன் அமெரிக்க டாலரை குறைக்க அந்த நாட்டு பாராளுமன்ற குழு அனுமதி அளித்துள்ளது. அதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நிதியுதவி கணிசமான அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் ஒளிந்திருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடனை சுட்டுக்கொலை செய்ததில் இருந்து அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படத்தொடங்கியது. மேலும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமெரிக்க விமானம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியபோது தெரியாமல் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது குண்டுகள் பாய்ந்ததில் 24 வீரர்கள் பலியானார்கள். இதனையொட்டி இருநாடுகளிடையே மேலும் விரிசல் ஏற்பட்டது. பாகிஸ்தான் செயல்பாடுகள் ரகசியமாக இருப்பதோடு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதாலும் சீனாவுடன் உறவை வலுப்படுத்தி வருவதாலும் பாகிஸ்தான் மீது இருந்த நம்பகத்தன்மை அமெரிக்காவுக்கு குறைந்துவிட்டது. அதனால் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியில் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலரை குறைக்க அமெரிக்க பாராளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவு நிதியுதவி பெறும் நாடுகளில் பாகிஸ்தான் முதலிடம் வகிக்கிறது. அதனால் 700 மில்லியன் அமெரிக்க டாலர் குறைப்பு என்பது அவ்வளவு பெரியது அல்ல. பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சியை அந்த நாட்டு ராணுவம் கொடுத்து வருகிறது. வெடிமருந்தை எப்படி வெடிக்க செய்வது என்பதில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருவதை நிறுத்தாத வரை அந்த நாட்டுக்கு அமெரிக்காவின் நிதியுதவி குறையத்தான் செய்யும் என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சாதாரண வெடிமருந்தை சக்தியூட்டி அதை வெடிகுண்டாக்கி அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகளும் அல்கொய்தா தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பயிற்சியை பாகிஸ்தான் ராணுவத்தினர் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானுக்கு 20 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலான நிதியை இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவே பாகிஸ்தான் அரசு பயன்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago