முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனை தீ விபத்து: மேலும் 2 பேர் கைது

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, டிச.14 - கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 90 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் 2 அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் 190 படுக்கைகளைக் கொண்ட ஏ.எம்.ஆர்.ஐ. என்ற 7 மாடி தனியார் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயில் கருகியும், மூச்சுத் திணறியும் 91 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலோர் நோயாளிகள். இந்த கோர சம்பவம் குறித்து மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த மருத்துவமனையின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் உட்பட 9  பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையின் மூத்த துணைத் தலைவர் எஸ்.உபதாய் இந்த மருத்துவமனையின்  பாதுகாப்பு குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி ஆகிய இருவரையும் நேற்று கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை கொல்கத்தா போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு) தமயந்தி சென் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிறகு இவர்கள் கொல்கத்தாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில்  ஆஜர் செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago