முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும்: அண்ணா

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.14 - ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அண்ணா ஹசாரே மத்திய அரசுக்கு எச்சரிக்கை மாதிரி விடுத்துள்ளார். நடப்பு பாராளுமன்ற கூட்டத்திலேயே பலமான லோக்பால் மசோதாவை உருவாக்காவிட்டால் திட்டமிட்டபடி வரும் 27-ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்றும் ஹசாரே எச்சரித்துள்ளார். லோக்பால் மசோதா அறிக்கையில் முக்கியமானவைகளை பாராளுமன்ற நிலைக்குழு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அண்ணா ஹசாரே 3-வது முறையாக உண்ணாவிரதம் இருந்தார். அதில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அண்ணாஹசாரே உண்ணாவிரதம் இருந்ததை மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொண்டன. இந்தநிலையில் அண்ணா ஹசாரே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நடப்பு பாராளுமன்ற கூட்டத்திலேயே பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டபடி வருகின்ற 27-ம் தேதி முதல் ராம்லீலா மைதானத்தில் மீண்டும் தொடர் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். தற்போது நிலையில் உள்ள லோக்பால் மசோதாவானது நாட்டில் ஊழலை ஒழிக்க உதவாது. நாட்டின் மொத்த வருவாயில் 70 சதவீதத்தை வளர்ச்சிக்கும் 30 சதவீதத்தை நிர்வாகத்திற்கும் செலவழிக்கும் இதை மீறி செலவு செய்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் என்றும் அண்ணா ஹசாரே கூறினார். நாட்டின் வளர்ச்சிக்கு உதவ தயாராக இருப்பதாகவும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர். ஒரு வலுவான கிராமப்புற இந்தியாவை உருவாக்குவதே எனது லட்சியம் என்றும் அவர் கூறினார். 

அண்ணா ஹசாரே பேட்டி அளித்தபோது அவரது குழுவில் உள்ள கிரண்பேடியும் இருந்தார். அவரும் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ராஜீவ்காந்தி மீது உங்கள் குழுவினர் குற்றஞ்சாட்டி இருப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு யார் என்ன கூறுகிறார்கள் என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாட்டின் நலன்தான் முக்கியம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்