முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தாவுடன் சமரசம் பேச காங்கிரஸ் திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.- 13 - மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திரிணாமுல் காங்கிரசுடன் சமரசம் செய்து கொள்ளும் வகையில் தங்களது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வர காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.  மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் தங்களுக்கு 98 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரி வந்த நிலையில் 58 தொகுதிகளை மட்டும்தான் தர முடியும் என மம்தா கூறி வருகிறார். ஆனால் தற்போது 70 தொகுதிகள் கிடைத்தால் போதும் என்கிற மனநிலைக்கு காங்கிரஸ் வந்து விட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான இறுதி உடன்பாடு இன்னும் ஓரிரு நாளில் எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே பிரணாப் முகர்ஜி தவிர மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரும் தனித்து போட்டியிடுவதையே விரும்புவதாகவும், ஆனால் கூட்டணி அமைத்து போட்டியிடுவதே நல்லது என சோனியா கூறி விட்டதாகவும் தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்