முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை 65 பைசா கூடுகிறது

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.15 - பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 65 பைசா வீதம் கூடுகிறது. இந்த விலை உயர்வு இந்த வாரத்தில் இருக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விலை உயர்வு தொடர்பாக எண்ணை நிறுவனங்கள் இன்று ஆய்வு செய்து முடிவெடுக்கின்றன. ஒரு வேளை விலையில் மாற்றம் இருந்தால் அது நாளை 16ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என்று தெரிகிறது. இந்த விலை உயர்வு அமுலுக்கு வந்தால் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும். கடந்த நவம்பர் 16 ம்தேதி பெட்ரோல் விலை ரூ.2.22 காசு குறைக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது மீண்டும் 65 பைசா கூடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்